தமிழக செய்திகள்

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

தினத்தந்தி

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தேவகோட்டை உட்கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பாக 2000 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக சருகனி அருகே மதுரை- தொண்டி புறவழிச்சாலையில் மரக்கன்று நடும் விழா தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மகிழம், மகோகலி, தளி, புங்கை, வேம்பு, நாவல், சரக்கொன்றை மற்றும் பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் செல்வகுமார் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்