தமிழக செய்திகள்

பிளாஸ்டிக் விழிப்புணர்வு கண்காட்சி

குத்தாலம் அரசு பள்ளியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது.

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படையின் சார்பில் தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு செல்லும் விதமாக பிளாஸ்டிக் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இதில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்ஒளி கலந்துகொண்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். தேசிய பசுமைப்படையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் கலந்து கொண்டு பிளாஸ்டிக் குறித்து மாணவாகளிடம் கலந்துரையாடினார். பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்லம்மாள் தலைமை தாங்கினார். கண்காட்சியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அவற்றின் மாற்றுப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன. 2022-23-ம் கல்வியாண்டில் தேசிய பசுமைப் படையில் பள்ளியளவில் சிறப்பாக செயல்பட்ட மாணவ,மாணவிகளுக்கு பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.மாணவர்கள் சார்கிவ் பள்ளிக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.பள்ளியின் சார்கிவ் மாணவர்கள் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் சண்முகநாதன், பள்ளியின் தேசிய பசுமைப் படை ஆசிரியர் சந்தோஷ் காட்சன் ஐசக் ஆகியோர் செய்திருந்தனர்.