தமிழக செய்திகள்

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சுகாதார செவிலியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயிலாடுதுறை;

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கீதா தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்கள் ஜெயசுதா, மணிமேகலை, மாவட்டத் துணைத் தலைவர் தாமரைச்செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் இந்திரா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், கிராம சுகாதார செவிலியர்கள், துணை செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 4 ஆண்டுகளாக கிராம சுகாதார செவிலியர்களுக்கு எந்த பணப்பயன்களும் வழங்கப்படாமல் உள்ளதை வழங்க வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 24-ந் தேதி(திங்கட்கிழமை) மாவட்டம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...