தமிழக செய்திகள்

பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 95 சதவீதம், ஈரோடு மாவட்டம் முதலிடம்

பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து 11-ம் வகுப்புக்கான தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டது.

தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக உள்ளது. மாணவர்கள் 93.3 சதவீதம் பேரும் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.5 சதவீதமாக உள்ளது. தேர்ச்சி விகிதத்தில் 98 சதவீதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்திலும், திருப்பூர் மாவட்டம் 2 ஆம் இடத்திலும், கோவை மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

*100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை: 2,634 ஆகும்.

*அரசுப்பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 90.6 சதவீதமாக உள்ளது.

http://www.tnresults.nic.in/, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலமாக தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பப்படும்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை