தமிழக செய்திகள்

பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டா.

பரங்கிப்பேட்டை:

பரங்கிப்பேட்டை அருகே உள்ள பஞ்சங்குப்பம் கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் சித்தார்த்தன் (வயது 17). பிளஸ்-1 படித்து வந்தார். பொதுத்தேர்வு முடிவு வெளியான நிலையில் அதில், தோல்வியை சந்தித்து இருந்தார். இதனால், சித்தார்த்தன் மனமுடைந்து இருந்து வந்தார். இந்நிலையில், வீட்டில் உள்ள ஒரு அறையில், தனது தாயின் சேலையால் அவர் தூக்குப்போட்டுக்கொண்டார்.

இதை பார்த்த அவரது பெற்றோர், அவரை மீட்டு சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சித்தார்த்தனை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே சித்தார்த்தன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து பார்த்திபன் பரங்கிப்பேட்டை போலிசில் புகார் செய்தார். அதன்பேரில்,இன்ஸ்பெக்டர் குணபாலன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு