தமிழக செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு: பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு - அமைச்சர் தகவல்

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் சி.பி.எஸ்.இ. பிளஸ் -2 பொது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலையை பொறுத்து, பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி நேற்று கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு, சி.பி.எஸ்.இ. பிளஸ் -2 பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக இன்று கல்வித்துறை அதிகாரிகளுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைத்து தரப்பின் கருத்துக்களையும் கேட்டபின் பிளஸ் 2 தேர்வு குறித்து இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் என அவர் கூறினார்.

மேலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவதில் மாணவ ,மாணவிகளுக்கு இடையே இருவேறு கருத்துகள் நிலவி வருவதாக தெரிவித்த அவர், மாணவர்களின் உடல்நலன், பாதுகாப்பு முக்கியம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறினார். மாணவர்களின் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டிய சூழல் உள்ளது என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்