தமிழக செய்திகள்

பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வினியோகம்

பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடந்து முடிந்தது. தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 பேர் எழுதி இருந்தனர். தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் கடந்த மே மாதம் 6-ந்தேதி வெளியானது. இதில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 பேர் வெற்றி பெற்றனர். அதாவது, 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் இன்று (வியாழக்கிழமை) முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும், மதிப்பெண் பட்டியலையும் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும், விவரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து