தமிழக செய்திகள்

செல்போன் பார்த்து கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

செல்போன் பார்த்து கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட தைலாவரம், அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் ரஞ்சினி (வயது 17), இவர் நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் எப்போதும் செல்போனில் சமூகவலைதள பக்கங்களை பார்த்து கொண்டிருந்ததால் இவரது பெற்றோர் ரஞ்சினியை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரஞ்சினி வழக்கம் போல் தூங்குவதற்கு சென்றார். நேற்று காலையில் ரஞ்சினி தூங்கி கொண்டிருந்த அறையின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரஞ்சினி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

உடனடியாக அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை