தமிழக செய்திகள்

முன்கூட்டியே வெளியாகிறது 'பிளஸ் 2' பொதுத்தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது

தினத்தந்தி

சென்னை, 

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்கியது.  3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18,344 தனித் தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வுகளள் அனைத்தும் மார்ச் 25-ந் தேதி நிறைவடைந்தது. உடனடியாக, விடைத்தாள் திருத்தும் பணிகளும் மாவட்ட தலைநகரங்களில் தெடங்கி நடைபெற்றது. இந்தப் பணிகள் முடிந்த நிலையில், மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்றது.

தற்போது இந்தப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. ஏற்கனவே, பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 9-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஒரு நாள் முன்னதாக மே மாதம் 8-ந் தேதி (நாளை மறுநாள்) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு நாளை (7-ந்தேதி) தொடங்க இருக்கும் நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவு ஒருநாள் முன்னதாக வருவது மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக இருக்கும். இதேபோல், பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இம்மாதம் 19-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதிலும் மாற்றம் ஏற்படும் என்று தெரிகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து