தமிழக செய்திகள்

விருதுநகரில் 'பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி பியூஷ்கோயல் தொடங்கி வைத்தனர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ்கோயல் முன்னிலையில் ஜவுளி பூங்காவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை,

இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா விருதுநகரில் இ. குமாரலிங்கபுரம் கிராமத்தில் அமைய உள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி பியுஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ்கோயல் முன்னிலையில் ஜவுளிப்பூங்காவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் 2 ஆயிரம் கோடியில் இந்த ஜவுளிப்பூங்கா அமைக்கப்படவுள்ளது.

சிப்காட்டில் உள்ள 1,052 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள ஜவுளிப்பூங்காவால் 2 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். உலகளவில் இந்தியாவின் ஜவுளித் தொழில் உற்பத்தி, ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்