தமிழக செய்திகள்

தமிழக பாஜக நிர்வாகிகளை சந்திக்கிறார் பிரதமர் மோடி

சென்னை கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

சென்னை,

பிரதமர் மோடி நாளை (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டுக்கு வருகிறார். சென்னையில் 'கேலோ' இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார் . இதற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் நாளை மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி நாளை பாஜக நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். 30க்கும் மேற்பட்ட தமிழக பாஜக  நிர்வாகிகளை அவர் சந்திக்கிறார்.மத்திய இணை மந்திரி எல்.முருகன் , தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்கின்றனர் ..சென்னை கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது 

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்