சென்னை,
பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
இதில், மத்திய இணையமைச்சர் எல். முருகன், மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இணைந்து கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றினர். கடற்கரையில் உள்ள பா.ஜ.க. கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை அண்ணாமலை, எல்.முருகன் ஏற்றினர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பா.ஜ.க.வுக்கு செப்டம்பர் 17 முக்கியமான நாள். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள். இன்று பல தலைவர்கள் பிறந்திருக்கலாம். ஆனால், உண்மையான சமூகநீதியை வழங்கி வரும் பிரதமர் மோடியின் பிறந்த நாளை பா.ஜ.க. கொண்டாடுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுபோது, பிற கட்சியினர் அவரவர் தலைவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதில் தவறில்லை என்ற அவர், நாம் பார்த்து வளர்ந்த தலைவர் பிரதமர் மோடி என்பதால் அவருடைய பிறந்தநாளை அடுத்த 20 நாட்களும் கொண்டாடப்படும் என்றார்.