தமிழக செய்திகள்

சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் ”நிவர் புயல்” பற்றிய கவிதை

நிவர் புயல் பற்றிய கவிதை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

தினத்தந்தி

சென்னை,

நிவர் புயல் உருவாகியதில் இருந்தே அது விவாதப் பொருளாகவே இருக்கிறது. இருக்கையின் நுணியிலேயே இருக்க வைக்கும் நிவர் புயல் பற்றி பொதுமக்கள் பேசாத நேரம் கிடையாது என்று சொல்லலாம். பொதுவாக மழைக்காலங்களில் மீம்ஸ்களுக்கு பஞ்சம் இருக்காது. இந்த காலமே மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போடுவதாக இருக்கும்.

ஆனால் நிவர் புயல் உருவெடுத்த பின்பு டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதுதொடர்பான மீம்ஸ்களே பெரும்பாலும் ஆக்கிரமித்துள்ளன. அந்தவகையில் நிவர் புயல் பற்றிய அடுக்குமொழி கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது வலைதளவாசிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த கவிதை வருமாறு:-

நிவர்-எங்கள் வீட்டில் இல்லை பவர்.

எங்களுக்கு சரியாக கிடைக்கவில்லை டவர்.

நீ வருண பகவானால் வந்த ஷவர்.

உன்னுடைய வேகத்தால் வீழ்ந்துவிடும் பழைய சுவர்.

உன்னால் நனைந்தால் வந்துவிடும் பீவர்.

உன்னை பற்றிய நியூஸ் கேட்டால் வருகிறது பியர்.

உன்னால் எகிறுகிறது சுகர்.

உன்னால் சாலையிலேயே ஓடுகிறது ரிவர்.

உனக்கு இல்லை எவரும் நிகர்.

எங்களை காப்பது இனி எவர்?.

நீ வேகமாக இங்கிருந்து நகர்.

வராதே இங்கே நெவர்.

இந்த வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

இந்த கவிதையை வலைதளவாசிகள் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து