தமிழக செய்திகள்

ஞானபீடம் விருதுக்கு கவிஞர் வைரமுத்து தேர்வு - டிடிவி தினகரன் வாழ்த்து

வைரமுத்துவின் தமிழ்ப்பணி மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான ஞானபீடம் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஞானபீடம் விருதின் மூலம் உலக இலக்கிய அரங்கில் தாய்மொழி தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய பெருமையைத் தேடித் தந்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழ்ப்பணி மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.