தமிழக செய்திகள்

சேத்தியாத்தோப்பு அருகே விஷ வண்டுகள் கடித்து 30 மாணவர்கள் காயம்

சேத்தியாத்தோப்பு அருகே விஷ வண்டுகள் கடித்து 30 மாணவர்கள் காயமடைந்தனா.

சேத்தியாத்தோப்பு, 

ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கிராமத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு திடீரென பறந்து வந்த விஷ வண்டுகள் அந்த மாணவர்களை விரட்டி விரட்டி கடித்தன. இதில் வலி தாங்க முடியாமல் மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். விஷ வண்டுகள் கடித்ததில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்