தமிழக செய்திகள்

புத்தாடை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்: ரங்கநாதன் தெருவில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆய்வு

தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ளதையொட்டி புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தினத்தந்தி

சென்னை:

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை நெருங்கி உள்ளதையொட்டி புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையொட்டி தியாகராயநகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் போலீசார் சார்பில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தியாகராயநகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை மற்றும் தியாகராயநகர் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்றிரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தீபாவளி பாதுகாப்பு பணியில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார். அப்போது கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை கமிஷனர் நரேந்திரன் நாயர் உள்பட போலீஸ் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது