தமிழக செய்திகள்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது காவல்நிலையத்தில் புகார்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வாடகைப் பணம் ரூ.20 லட்சத்தை செலுத்தாமல் ஸ்டூடியோவை காலி செய்வதாக உரிமையாளர் ஹஜ்மத் பேகம் புகார் அளித்துள்ளார்.

பலமுறை பணத்தை கேட்டு தரவில்லை என்றும், போன் செய்தால் எடுப்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

2018 முதல் வைத்திருந்த ஸ்டூடியோவிற்கு 3 ஆண்டுகளாக வாடகை தரவில்லை என்று அவர் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

காவல் நிலைய புகார் குறித்து யுவன் சங்கர் ராஜா தரப்பில் இருந்து இன்னும் விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை