தமிழக செய்திகள்

ரேஷன் அரிசி உற்பத்தி ஆலைகளில் போலீசார் திடீர் ஆய்வு

ரேஷன் அரிசி உற்பத்தி ஆலைகளில் போலீசார் திடீர் ஆய்வு நடத்தினர்.

தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை ஐ.ஜி. வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில் திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் ரேஷன் அரிசி உற்பத்தி செய்யும் நெல் அரவை முகவர்களின் ஆலைகளில் ஏதாவது முறைகேடு நடைபெறுகிறதா? என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான குழுவினர் மணப்பாறை பகுதியில் உள்ள நெல் அரவை முகவர்களின் ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்த ஆலைகளில் மாதந்தோறும் பயன்பாட்டில் இருக்கும் மின்அளவையும், அவர்கள் உற்பத்தி செய்த ரேஷன் அரிசி அளவையும் ஒப்பிட்டு இதன் மூலம் முறைகேடு நடைபெறுகிறதா? என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை