தமிழக செய்திகள்

காவல்துறை சார்பில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

ஆலங்காயம் அருகே நிம்மியம்பட்டு கிராமத்தில் காவல்துறை சார்பில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

வாணியம்பாடி

ஆலங்காயம் அருகே நிம்மியம்பட்டு கிராமத்தில் காவல்துறை சார்பில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

ஆலங்காயம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நிம்மியம்பட்டு கிராமத்தில் குற்றத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் மற்றும் வாணியம்பாடி சரக போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் செம்மரம் வெட்ட செல்பவர்களை பற்றியும், திருட்டு வழக்கில் ஈடுபடுபவர்கள் பற்றியும், குழந்தை திருமணம் நடப்பது குறித்து அறிந்தால் போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என இதில் கலந்து கொண்ட கிராம மக்களிடம் போலீசார் அறிவுறுத்தினர்.

மேலும் சைபர் கிரைம் குற்ற நடவடிக்கைகள் தடுப்பது பற்றியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்