தமிழக செய்திகள்

சவுக்கு சங்கர் மீது போலீசாருக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை-ஐகோர்ட்டில் போலீஸ் கமிஷனர் விளக்கம்

குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு எதிராக போலீஸ் அதிகாரிகளுக்கு எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியும் இல்லை என சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் விளக்கம் அளித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பெண் பேலீஸ்காரர்கள், பேலீஸ் உயர் அதிகாரிகளை அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பேலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகேர்ட்டில், சவுக்கு சங்கர் தாயார் கமலா ஆட்கெணர்வு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுவை தள்ளுபடி செய்யக் கேரி சென்னை பேலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தேர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கூறியிருப்பதாவது:-

சவுக்கு சங்கரை தனிப்பட்ட முறையில் பேலீஸ் அதிகாரிகள் பழிவாங்கும் விதமாக அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதாக மனுதாரர் கூறுவது உண்மையில்லை. சவுக்கு சங்கருக்கு எதிராக பேலீஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் எந்த ஒரு பகையே, காழ்ப்புணர்ச்சியே இல்லை. அவர் மீதுள்ள வழக்குகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கரை தாக்க வேண்டும் என்ற எண்ணம் சிறை அதிகாரிகளுக்கும் கிடையாது. அவர் காயம் அடைந்த சம்பவத்துக்கும், சிறை அதிகாரிகளுக்கும் எந்த சம்மந்ததும் கிடையாது. பெது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதைத் தடுக்கதான் அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை