தமிழக செய்திகள்

போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

தினத்தந்தி

வருகிற 18-ந்தேதி தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு திருப்பனந்தாள் அருகே சோழபுரம் போலீஸ்துறை சார்பில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. இந்த அணிவகுப்பு ஊர்வலம் முக்கிய கடை வீதி வழியாக சென்று போலீஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகாண்டு ஊர்வலமாக சென்றனர்.

அதேபோல் திருபுவனம் பகுதியில் நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் திருபுவனம் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக திருபுவனம் கடைவீதி வழியாக கும்பகோணம் மயிலாடுதுறை மெயின் ரோட்டில் திருவிடைமருதூர் வரை அணிவகுத்து சென்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்