தமிழக செய்திகள்

தேர்த்திருவிழாவையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு

தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

தேர்த்திருவிழா

தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் பங்குனி தேர்த்திருவிழா ஆண்டு தோறும் மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து ஆயிரம் பானை பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் தலையலங்காரம் நிகழ்ச்சி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு நடைபெற உள்ளது.

இதையொட்டி சட்டம் ஒழுங்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் நேற்று முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின் தலைமையில் தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

பாதுகாப்புடன்...

தொட்டியம் வாணப்பட்டறை மைதானம், திருச்சி ரோடு, பவளக்கடை வீதி, சந்தைபேட்டை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக போலீசார் அணிவகுப்பாக சென்றனர். அப்போது திருவிழாவை மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் எவ்வித அசம்பாவிதம் இன்றி கொண்டாடுமாறு போலீஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்