சேலம்,
சேலம் சீலநாயக்கன்பட்டியில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் வரும், 13ல் நடத்த தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்காக அனுமதி கேட்டு, போலீசில் கடந்த, 3ல் கடிதம் வழங்கப்பட்டது. அதேபோல், மாநகர் போலீஸ் கமிஷனரிடம், கடந்த, 4ல் நிர்வாகிகள் மனு அளித்தனர். இந்த மனு குறித்து போலீசார் தீவிரமாக ஆலோசித்து வந்தனர்.
இந்நிலையில், பிப்.,13ல் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
* 13ம் தேதி மதியம் 12.00 மணி முதல் 3 மணி வரை மக்கள் சந்திப்புக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
* 5,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.
* அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட வேண்டும்.
* விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 51 கட்டுப்பாடுகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.