தமிழக செய்திகள்

சாட்சி சொல்ல வராத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு - எழும்பூர் கோர்ட்டு உத்தரவு

சாட்சி சொல்ல வராத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நெல்லை மாவட்டத்தில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சிவசுப்பு. இவர் கடந்த 2009-ம் ஆண்டில் சென்னை வியாசர்பாடி போலீஸ் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

அப்போது, வியாசர் நகர் சாலை சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை வழிமறித்து அவர்களிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியை பறித்ததோடு, அவர்களை அடித்து காயம் ஏற்படுத்தியதாக திருவள்ளூரை சேர்ந்த செல்வராஜ் (வயது 23), சரஜ்குமார்(25), வியாசர்பாடியை சேர்ந்த ரீகன் என்கிற டீக்கா மற்றும் செஞ்ஜெயனன் என்கிற சஞ்சய்(28) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினார். இதே போன்று, வியாசர்பாடி கணேசபுரம் 1-வது தெருவில் பூட்டி இருந்த ஒரு வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 2 ஜோடி வெள்ளி கொலுசு, ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 2 செல்போன்கள், ஒரு கைக்கெடிகாரத்தை திருடிய புளியந்தோப்பை சேர்ந்த மாரி(30) என்பவரையும் இன்ஸ்பெக்டர் சிவசுப்பு கைது செய்து விசாரணை நடத்தினார்.

இந்த 2 வழக்குகளும் சென்னை எழும்பூர் குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாட்சி சொல்வதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்புவுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்புவுக்கு எழும்பூர் குற்றவியல் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை