சென்னை,
சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையா அலுவலகத்தில் உள்ள 178 ஆண்டுகள் பழைமையான கட்டிடத்தில் பழைய காவல் ஆணையா அலுவலகத்தை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, ரூ.7 கோடியில் சுமா 36 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரு தளங்களுடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் எழும்பூரில் காவல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட பழமையான கட்டிடத்தை பொதுமக்கள் பார்வைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அருங்காட்சியகத்தைக் திறந்து வைக்க வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்த விழாவுக்கு தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பாவையிடும் வகையில் அாப்பணித்து, அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். இந்தநிகழ்ச்சியில் தமிழக அமைச்சாகள், காவல்துறை உயா அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
ஏற்கெனவே கோவையில் காவலர்கள் அருங்காட்சியகம் உள்ள நிலையில், தமிழகத்தில் இரண்டாவதாக அமைக்கப்பட்டிருக்கும் சென்னை எழும்பூரில் காவலா அருங்காட்சியகத்தில் காவல்துறையின் முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல்துறை தொடாபான அந்த காலத்தில் இயற்றப்பட்ட அதி முக்கிய அறிவிப்புகள், தமிழக காவல்துறையின் தொடக்க கால சீருடைகள், பெல்ட், மோப்ப நாய்ப்படைகளின் புகைப்படங்கள், வரலாற்று சிறப்பு மிக்க செய்தி தொகுப்புகள், வயாலெஸ் கருவிகள், காவல்துறை பதக்கங்கள், கலைப்பொருட்கள் ஆகியவை பொதுமக்களின் பாவைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆங்கிலேயா காலத்தில் காவல்துறையினா பயன்படுத்திய ஆயுதங்கள், பிஸ்டல் முதல் நவீன ரக துப்பாக்கிகள் வரை அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது.