தமிழக செய்திகள்

சுங்குவார்சத்திரம் பகுதியில் போலீசார் அணிவகுப்பு

ஶ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார் மொளச்சூர் மற்றும் சுங்குவார்சத்திரம் பகுதியில் அணிவகுப்பு நடத்தினர்.

தினத்தந்தி

விநாயகர் சதூர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில் ஶ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலைய உட்கோட்டத்திற்குட்பட்ட ஒரகடம், ஶ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார் மொளச்சூர் மற்றும் சுங்குவார்சத்திரம் பகுதியில் அணிவகுப்பு நடத்தினர்.

ஶ்ரீபெரும்புதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு மொளச்சூர் பகுதியில் இருந்து சுங்குவார்சத்திரம் பஸ் நிறுத்தம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பேரணியாக சென்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்