தமிழக செய்திகள்

ரவுடி கருக்கா வினோத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனு

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்திய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்திய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

ஜாமீன் பெற்ற வினோத், ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசியுள்ளார் என்றும், கருக்கா வினோத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றபோது, கருக்கா வினோத் நவம்பர் 15ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். .  

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்