தமிழக செய்திகள்

விருத்தாசலத்தில் பயணிகளிடம் போலீசார் திடீர் சோதனை

ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா? விருத்தாசலத்தில் பயணிகளிடம் போலீசார் திடீர் சோதனை

தினத்தந்தி

விருத்தாசலம்

திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை முதன்மை கோட்ட பாதுகாப்பு ஆணையர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சிவ சுப்புராய்டு, ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், வெடிகுண்டு பிரிவு போலீஸ்காரர்கள் சங்கர், மணிகண்டன் ஆகியோரை கொண்ட குழுவினர் நேற்று விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது ரெயில்களில் பயணிகள் யாரேனும் பட்டாசு கொண்டு செல்கிறார்களா?, மேலும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஆய்வு செய்தனர். தீபாவளி பண்டிகை காலங்களில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்லக்கூடாது, மீறி கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பணிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினா.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது