தமிழக செய்திகள்

புதுக்கோட்டை சிறையில் போலீசார் அதிரடி சோதனை

புதுக்கோட்டை சிறையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

சிறையில் சோதனை

மத்திய மற்றும் மாவட்ட கிளை சிறைகள், சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் போதைப் பொருட்கள் பயன்பாடு உள்ளதாகவும், கைதிகள் செல்போன்களை பயன்படுத்துகின்றனர் எனவும் புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இன்று காலை 7 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சிறைக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

செல்போன்

சிறைக்குள் கஞ்சா, பீடி, சிகரெட், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கைதிகளிடம் உள்ளதா என்பது குறித்தும், கைதிகள் செல்போன் பயன்படுத்துகின்றனரா? என்பது குறித்தும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை முடிவில் எதுவும் கைப்பற்றப்பட வில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்