தமிழக செய்திகள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்- சி.ஆர்.பி.எப். போட்டி தேர்வுகளுக்கு இன்று முதல் இலவச பயிற்சி வகுப்புகள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்- சி.ஆர்.பி.எப். போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூரில் இன்று முதல் தொடங்குகிறது.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்கும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சி.ஆர்.பி.எப். போலீஸ் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (புதன்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலை நாடுனர்கள், இளைஞர்கள் அதிகளவில் இவ்விரு தேர்வுக்கும், விண்ணப்பித்து இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு அதிகளவில் தேர்ச்சி பெற்று பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்