தமிழக செய்திகள்

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

வதான்யேஸ்வரர் கோவில் குடமுழுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

மயிலாடுதுறை;

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதான்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா மற்றும் போலீசார் கோவிலில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். மேலும் கோவில் உள்ளே சென்று வெளியேறும் பாதைகள் அமைப்பது தொடர்பாகவும் ராஜகோபுரம் மேலே செல்லும் வழிகளில் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி ஞானசம்பந்த பரமாச்சாரியார் சாமிகளை நேரில் சந்தித்து குடமுழுக்கு பணிகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் இருந்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை