தமிழக செய்திகள்

காவலர் வீரவணக்க நாள்: அனைத்து காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை நினைவு கூறுகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி

காவலர் வீரவணக்க நாளையொட்டி, அனைத்து காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை நினைவு கூறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உயிர் நீத்த காவலர்களுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். அதன்படி சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி திரிபாதியும், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் காவலர் வீரவணக்க நாளையொட்டி, அனைத்து காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை நினைவு கூறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், சமூகத்தின் பாதுகாவலனாய், பொதுமக்களின் உற்ற தோழனாய், அர்ப்பணிப்பின் இலக்கணமாய், தங்களின் அயராத உழைப்பால் அல்லும் பகலும் மக்கள் பணியாற்றிடும் அனைத்து காவல் நண்பர்களின் உன்னத தியாகத்தை தேசிய காவல்துறை தின நாளில் நினைவு கூர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்