தமிழக செய்திகள்

பிராங்க் வீடியோக்கள் வெளியிடும் உரிமையாளர்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை...!

பிராங்க் வீடியோக்கள் வெளியிடும் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பி போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

பிராங்க் வீடியோக்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ரோகித் குமார் என்ற இளைஞர் பிராங்க் வீடியோக்கள் வெளியிடும், 5 யூடியூப் சேனல்கள் மீது, மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி, பல்வேறு அறிவுரைகள் வழங்கி எச்சரித்து அனுப்பியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் பிராங்க் வீடியோவால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும், புகார் அளிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் மீது வீடியோவின் தன்மைக்கு ஏற்ப கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை