தமிழக செய்திகள்

கல்குவாரி குட்டையில் குதித்து போலீஸ்காரர் தற்கொலை

வேட்டவலம் அருகே போலீஸ்காரர் ஒருவர் கடன் தொல்லையால் கல் குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்தார்.

தினத்தந்தி

வேட்டவலம்

வேட்டவலம் அருகே போலீஸ்காரர் ஒருவர் கடன் தொல்லையால் கல் குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்தார்.

போலீஸ்காரர்

வேட்டவலம் பெரியார் தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 28). இவர் சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் கவுரி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தமிழ்அமுதன் (2) என்ற மகன் உள்ளான்.

பிரசாந்த்துக்கு கடன் தொல்லை இருந்துள்ளது. மேலும் குடும்ப பிரச்சினையாலும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை போலீஸ்காரர் பிரசாந்த், வீட்டின் அருகே உள்ள ஆணைக்கட்டு சாவடி பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைக்கு சென்றார்.

அங்கு குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

உடல் மீட்பு

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் போலீஸ்காரர் பிரசாந்த் குதித்த கல் குவாரி குட்டையில் இறங்கி அவரை தேடினர்.

சில மணி நேர தேடலுக்கு பிறகு பிரசாந்தை அவர்கள் பிணமாக மீட்டனர். பின்னர் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பிரசாந்தின் தாயார் குமுதவல்லி, வேட்டவலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு