தமிழக செய்திகள்

விபத்தில் போலீஸ்காரர் பலி

விபத்தில் போலீஸ்காரர் பலியானார்

மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 40). இவர் கரிமேடு போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக இருந்தார். சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் ரோந்துபணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது நாய் குறுக்கே வந்ததால் திடீரென்று பிரேக் போட்டதாகவும், அப்போது பின்னால் வந்த ஆட்டோ மோதியதில் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கடந்த ஒரு வாரமாக டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலன் அளிக்காமல் ராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

SCROLL FOR NEXT