சென்னை,
சென்னை ஐஸ்-ஹவுஸ் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் சூர்யா (31 வயது). இவர் மீது அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் மனு ஒன்றினை ஐஸ்-ஹவுஸ் போலீஸ் நிலைத்தில் கொடுத்தார். அதில், தன்னிடம் போலீஸ்காரர் சூர்யா பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தொல்லை கொடுத்து வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக ராயப்பேட்டை உதவி போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் போலீஸ்காரர் சூர்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மயிலாப்பூர் துணை கமிஷனர் கார்த்திக் பிறப்பித்தார்.
இதற்கிடையில் போலீஸ்காரர் சூர்யா புகார் கொடுத்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சம்பவம் வீடியோ காட்சியாக சமூக வலைதளங்களில் வைரலானது. புகார் கொடுத்த இளம்பெண் மீதும் ஏற்கெனவே 3 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.