யுபிஎஸ்சி தேர்வில் 2-ம் இடம் பிடித்த தமிழக மாணவி - டிடிவி தினகரன் வாழ்த்து

யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த தமிழக மாணவிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வில் 2-ம் இடம் பிடித்த தமிழக மாணவி - டிடிவி தினகரன் வாழ்த்து
Published on

சென்னை,

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய குடிமைப்பணித் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி 2-ம் இடத்தையும், ராஜா முகைதீன் என்ற மாணவர் 7-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். அவர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

Also Read
கேரள அரசின் அத்துமீறலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது - சீமான் கண்டனம்
யுபிஎஸ்சி தேர்வில் 2-ம் இடம் பிடித்த தமிழக மாணவி - டிடிவி தினகரன் வாழ்த்து

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே அவர்களுக்கும், ஏழாவது இடத்தை பிடித்திருக்கும் ராஜா முகைதீன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Also Read
கணவனின் சந்தேக புத்தியால் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
யுபிஎஸ்சி தேர்வில் 2-ம் இடம் பிடித்த தமிழக மாணவி - டிடிவி தினகரன் வாழ்த்து

விடாமுயற்சி மற்றும் தொடர் பயிற்சியின் மூலம் அரசுத்துறைகளின் மிக உயரிய பொறுப்புகளுக்குத் தேர்வாகியிருக்கும் இருவரும், அவரவர் பணியில் சிறந்து விளங்கிடவும், மேன்மேலும் பல சாதனைகள் படைத்திடவும் மீண்டும் ஒருமுறை மனதார வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com