அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ ஒழிப்பு மற்றும் போதை தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து ஆகியவற்றுக்கான விழிப்புணர்வு கார் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ஜெ.மணிகண்டன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க போலியோ பிளஸ் சேர்மன் முருகன் பார்மசி வெங்கடரமணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அரக்கோணம் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் தினேஷ் மற்றும் செல்வராஜ் (போக்குவரத்து) ஆகியோர் கலந்துகொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அரக்கோணம் அவுசிங் போர்டில் இருந்து கார் ஊர்வலம் புறப்பட்டு எஸ்.ஆர்.கேட் வரை சென்றனர். நிகழ்ச்சியில் எஸ்.செந்தில் குமார், டி.எஸ்.ரவிகுமார், எஸ்.பிரபாகரன், ஓ.டி.பி.மஹால் ஒளிவண்ணன், பி.ரவிகுமார், பி.ஆர்.முரளி, ஹரிகுமார், கவிஞர்.மோகன், சீனிவாசன், கஜபதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.