தமிழக செய்திகள்

அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினத்தந்தி

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டையில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க. சார்பில் தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், அப்துல்லா எம்.பி., தி.மு.க. நகர செயலாளர் செந்தில் உள்பட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர்கள் சேட், பாஸ்கர் தலைமையிலும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையிலும், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி தலைமையிலும், அ.ம.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டன.

மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதேபோல் அறந்தாங்கியில் தி.மு.க. சார்பில் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு