கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 28-ந்தேதி தொடங்குகிறது

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 28-ந்தேதி தொடங்க உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் காலி பணியிடங்களுக்கு கம்ப்யூட்டர் வாயிலாக போட்டித்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வு வருகிற 28-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடக்கிறது. இந்த 4 நாட்களில் 8 பிரிவுகளாக பிரித்து தேர்வு நடத்தப்பட உள்ளது. அது தொடர்பான அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

தேர்வர்கள் இணையதளத்தில் சென்று முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வுகளுக்கான அனுமதி சீட்டு (ஹால் டிக்கெட்) விரைவில் வெளியிடப்படும் என்றும், தேர்வு மையங்களின் தயார்நிலை, நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்படுத்தப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை