தமிழக செய்திகள்

சிதம்பரம் அருகே பாலிடெக்னிக் மாணவர் விஷம் குடித்து தற்கொலை

சிதம்பரம் அருகே கல்லூரிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் பாலிடெக்னிக் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

அண்ணாமலைநகர், 

சிதம்பரம் அருகே உள்ள வடக்கு மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் குமார் மகன் ராகுல்காந்தி (வயது 20). இவர் வடலூர் கருங்குழியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். ராகுல்காந்தி கடந்த சில நாட்களாக சரிவர கல்லூரிக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதை அவரது தாய் கீதா கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராகுல்காந்தி வல்லம்படுகை வார சந்தை அருகில் விஷத்தை குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராகுல்காந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்