தமிழக செய்திகள்

தேனி அருகே குளம் தூர்வாரும் பணி

தேனி அருகே ஜங்கால்பட்டியில் குளம் தூர்வாரும் பணியை கலெக்டர் தாடங்கி வைத்தார்

தினத்தந்தி

தேனி அருகே ஜங்கால்பட்டியில் உள்ள சுப்பிரமணி செட்டிகுளம் ரூ.8 லட்சம் செலவில் தூர்வாரும் பணி  தொடங்கியது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, பொக்லைன் எந்திரத்தை இயக்கி தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், உதவி பொறியாளர்கள் அஜய், சோனா மற்றும் பலர் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து, ஜங்கால்பட்டி, பூமலைக்குண்டு, குப்பிநாயக்கன்பட்டி, அம்பாசமுத்திரம் ஊராட்சி பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு