தமிழக செய்திகள்

கடத்தூரில்ரூ.10 லட்சத்தில் குளம் தூர்வாரும் பணி

கடத்தூரில் ரூ.10 லட்சத்தில் குளம் தூர்வாரும் பணி நடைபெற்றது.

தினத்தந்தி

சின்னசேலம், 

சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடத்தூர் ஊராட்சியில் பெருமாள் கோவில் அருகே குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தை ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

இதற்கு ஒன்றிய குழு துணை தலைவர் அன்புமணிமாறன் தலைமை தாங்கி, குளம் சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பேபி அய்யாசாமி வரவேற்றார். இதில் ஊராட்சி செயலர் சீனிவாசன், கிளை செயலாளர் அன்பரசு, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு