தமிழக செய்திகள்

தமிழக கலாசாரத்தை பின்பற்றி சென்னையில் கேரள மக்கள் கொண்டாடிய பொங்கல் விழா

தமிழக கலாசாரத்தை பின்பற்றி சென்னையில் கேரள மக்கள், பொங்கல் விழா கொண்டாடினர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் வசித்து வரும் கேரள மக்கள் சார்பில் தி மலையாளி கிளப்' எனப்படும் அமைப்பு சென்னை சேத்துப்பட்டு பகுதியில் 125 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கிளப் சார்பில் அதன் கட்டிட வளாகத்தில் முதன்முறையாக நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தமிழக கலாசாரத்தை பின்பற்றி நடைபெற்ற விழாவையொட்டி, அரங்கம் முழுவதும் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வர்ணம் தீட்டப்பட்ட பொங்கல் பானைகள் வைக்கப்பட்டிருந்தன. மாட்டு பொங்கலின் போது மாடுகளுக்கு பூஜை செய்வதை நினைவு கூறும் வகையில் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாட்டின் சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில் கலந்து கொண்டவர்கள் பொங்கலோ பொங்கல்' என உற்சாகமாக கோஷமிட்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.இதன்பின்பு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இந்த விழாவுக்கு கிளப் தலைவர் கோகுலம் கோபால் தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், பொருளாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயற்குழு உறுப்பினர் சங்கர்மேனன் வரவேற்றார். முன்னாள் தலைவர் நந்தகோவிந்த், உறுப்பினர் சேர்க்கை கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள் பிஜுசாக்கோ, விஜயன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொங்கல் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக இந்த ஆண்டு முதல் கிளப்பில் மலையாளிகள் தவிர தமிழர்களையும் உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளும் நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது உறுப்பினர்களாக சேர்ந்த தமிழர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை