நம்மை சுற்றி பல ஜீவன்கள் இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது. அதிலும் குறிப்பாக நாம் விவசாய கலாசாரமாக வளர்ந்து வந்ததால் மாட்டுக்கும், நமக்கும் ஒரு ஆழமான தொடர்பு உள்ளது. வயலில் மாடு நம்முடன் இணைந்து வேலை செய்கிறது. நாம் குடிக்கும் பாலும் அதனிடம் இருந்துதான் வருகிறது. பசு நம் தாய்க்கு பிறகு ஒரு முக்கிய உயிராக இருக்கிறாள். பசு நம் தாய்க்கு இணையானவள். அதனால் தான் மாட்டு பொங்கலை நாம் பெரிய விழாவாக கொண்டாடுகிறோம்.
பொங்கல் பண்டிகை, நாம் உருவாக காரணமான மண், விலங்குகள், காற்று, நீர், மக்கள் என அனைத்தையும் கொண்டாடுவதற்கான ஒரு விழா. கொண்டாடி களித்திடுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.