தமிழக செய்திகள்

பொங்கல் பரிசுத்தொகுப்பு - இன்று முதல் டோக்கன் வினியோகம்...!

டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் .

தினத்தந்தி

சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.239 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும் மத்திய, மாநில அரசு ஊழியாகள், வருமான வரி செலுத்துவோ, எந்தப் பொருளும் பெறாத குடும்ப அட்டை வைத்திருப்போ, சாக்கரை அட்டைதாராகளுக்கு ரொக்கத் தொகை வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ரூ. 1,000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படுகிறது. டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் . 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து