தமிழக செய்திகள்

பொன்.மாணிக்கவேல் நேர்மையானவர் என்று யார் சொன்னது? அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் - சி.வி.சண்முகம்

பொன்.மாணிக்கவேல் நேர்மையானவர் என்று யார் சொன்னது? அரசு அதிகாரிகள் உள்நோக்கத்தோடு செயல்படக்கூடாது என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

சென்னை,

அமைச்சர் சி.வி. சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

பொன்.மாணிக்கவேல் இதுவரை எத்தனை சிலைகளை கண்டுபிடித்துள்ளார், எத்தனை பேரை கைது செய்துள்ளார் என்பதை தெரிவிக்க வேண்டும். பொன்.மாணிக்கவேல் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு, யாரோ ஒருவரின் கைப்பாவையாக செயல்படுகிறார். பொன்.மாணிக்கவேல் நேர்மையானவர் என்று யார் சொன்னது? அரசு அதிகாரிகள் உள்நோக்கத்தோடு செயல்படக்கூடாது.

நேர்மையான அதிகாரி என்றால் குற்றச்சாட்டுகளுக்கு பொன்.மாணிக்கவேல் பதில் தர வேண்டும். பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவால் பொன்.மாணிக்கவேல் தப்பித்து வருகிறார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டது தான், ஆலையை திறப்பதற்கான எந்த வாய்ப்பையும் அரசு கொடுக்காது. கொள்கை முடிவின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது ஆளுநரின் கையில் தான் உள்ளது.

கட்சிக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு துணை முதல்வரின் தம்பி ஓ.ராஜா நீக்கம் ஓர் உதாரணமாகும் என கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்