தமிழக செய்திகள்

பரமத்திவேலூர் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை

தினத்தந்தி

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள திருஞான சம்பந்தர் மடாலயத்தில் நேற்று முன்தினம் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுந்தரர் தேவாரம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடைபெற்றது. சுந்தரமூர்த்திசாமி மற்றும் நால்வர் பெருமக்களுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்