தமிழக செய்திகள்

பூமலூர் புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா

பூமலூர் புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்பூர் மாவட்டம்,மங்கலத்தை அடுத்த பூமலூர் பகுதியில் உள்ள பூமலூர் புனித அந்தோணியார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்த விழாவிற்கு கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் லாஷ் தலைமை தாங்கினார். பங்கு குருவுடன் இணைந்து குழந்தைசாமி,அருண்,ஸ்டீபன் (ஆக்ரா) ,ஹென்றி டேனியல்,பிலிப், க்ளாட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு கூட்டுபாடல் திருப்பலி நடந்தது. மேலும் வருகிற 11-ந்தேதி ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி, மின் அலங்கார தேர்பவனி நடைபெறவுள்ளது.

பின்னர் வருகிற 12-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு கூட்டுபாடல் திருப்பலி, காலை 10 மணிக்கு வேண்டுதல் தேர், காலை 11 மணிக்கு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு மதில்சுற்றி தேர்பவனி ,திருப்பலி நடைபெறுகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு