கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

கொடைக்கானலில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் நாளை திறப்பு!

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுகிறது.

தினத்தந்தி

திண்டுக்கல்,

கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுகின்றன. மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை ஆகியவை நாளை முதல் திறக்கப்படுகின்றன.

வனப்பகுதிக்குள் நுழையும் வாகனங்கள் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புக், காப்பீட்டு சான்றிதழ், மாசு சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேரிஜம் பகுதிக்கு செல்ல ஒரு நாளைக்கு 50 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது